Categories
உலக செய்திகள்

“ஆங்கிலக்கால்வாயில் படகு விபத்து!”… கடத்தல்காரர்களின் மிரட்டலால் உயிரிழந்த மணப்பெண்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கில கால்வாய் வழியே பிரிட்டனுக்குள் நுழைய முயற்சித்து கடலில் மூழ்கி பலியான முதல் புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

ஈராக் நாட்டை சேர்ந்த என்ற Mariam Nouri Dargalayi 24 வயது பெண்ணிற்கும் பிரிட்டனை சேர்ந்த Karzan Asad என்ற நபருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில், Mariam தன் வருங்கால கணவரை சந்திக்க ஆபத்தான முறையில் படகில் சென்றிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் 50 பேர், 2 படகுகளில் ஏறி பிரிட்டனை நோக்கி பயணித்தனர். அப்போது திடீரென்று ஒரு படகில் பழுது ஏற்பட்டது. எனவே, அந்த படகில் இருந்தவர்களை வேறு படகில் ஏற்றாமல், பணத்திற்காக கடத்தல்காரர்கள் ஒரே படகில் அதிகமான மக்களை ஏற்றி இருக்கிறார்கள்.

அதிக கூட்டம் இருந்ததால், அந்தப் படகில் ஏற சிலர் மறுத்திருக்கிறார்கள். அப்போது கடத்தல்காரர்கள் துப்பாக்கியால் மிரட்டி படகில் ஏற வைத்துள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்து Mariam-ம் ஏறியிருக்கிறார். அதே சமயத்தில், தன் வருங்கால மனைவியின் வருகைக்காக  காத்திருந்த Karzan நான்கு மணி நேரங்களாக அவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

அப்போது, திடீரென்று இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்பு அவரின் வருங்கால மனைவிக்கு பதில் அவர் மரணமடைந்த செய்தி தான், Karzan-ஐ வந்தடைந்தது. அவர் பேரதிர்ச்சிக்குள்ளனார். மேலும், ஈராக்கில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். இது போன்ற ஒரு நிலை, யாருக்கும் ஏற்படக் கூடாது Mariam-ன் தோழி கூறியிருக்கிறார்.

Categories

Tech |