Categories
உலக செய்திகள்

செல்போன் பார்த்துக்கொண்ட தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்..!!

புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலைய நடைமேடையில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்த நபர் தண்டவாளத்தில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

மக்களுக்கு உபயோகமான செல்போன் எந்த இடங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை முதலில் மக்கள் தெரிந்திருக்க வேண்டும். சாலை அல்லது ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், பல விபத்துகளைத் தவிர்க்க நேரிடும். அதற்கு எடுத்துக்காட்டாகத் தான், அர்ஜென்டினாவின் புவெனஸ் அயர்ஸ் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

Image result for A subway commuter distracted by his cell phone has a close call on the subway tracks

அங்கு, ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருந்த நபர் ஒருவர், செல்போன் பார்த்துக்கொண்டே நடந்து செல்கிறார். அப்போது, ஒரு கட்டத்தில் செல்போனில் முழு கவனத்தைக் கொண்ட நபர், நடைமேடையில் எல்லைக்கு வந்ததை அறியாமல் தவறி கீழே விழுந்தார்.

Image result for A subway commuter distracted by his cell phone has a close call on the subway tracks

இதை பார்த்த நடைமேடையிலிருந்த சகப் பயணிகள், அவரை தூக்கி காப்பாற்றினர். நல்வாய்ப்பாக அவர் தவறி விழும் வேலையில் ரயில் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தற்போது, ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இக் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் தனது செல்போன் பயன்படுத்திக்கொண்டே நடைமேடையில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |