உகண்டாவில் வசிக்கும் 40 வயது பெண் தற்போதுவரை 44 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.
உகாண்டாவில் வசிக்கும் மாமா உகண்டா என்ற 40 வயதுடைய பெண் மற்றும் அவரின் கணவருக்கு, 44 குழந்தைகள் இருக்கிறார்கள். சிறப்பான மருத்துவ சிகிச்சை எதுவும் செய்யாமல் அவருக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது. இவருக்கு 12 வயதில் திருமணம் நடந்திருக்கிறது.
அந்த பெண்ணின் கணவர், இப்போது வீட்டில் இருந்த பணம் முழுவதையும், எடுத்துக் கொண்டு அந்த பெண்ணை தனியாக விட்டுவிட்டு, போய்விட்டார். தற்போது, 44 குழந்தைகளையும் அவர் மட்டும் தனியாக கவனித்து வருகிறார். குழந்தைகளில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஆண் குழந்தைகள் 22 பேரும், பெண் குழந்தைகள் 16 பேரும் இருக்கிறார்கள். இதில், பல பிரசவத்தில் அந்த பெண்ணிற்கு ஒரே சமயத்தில் 5 குழந்தைகள், 3 குழந்தைகள் மற்றும் இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது.