Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன தகவல்…!!

கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்கள் 2 டேஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் 2 தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தென் ஆப்பிரிக்காவிலிருந்து தமிழகம் வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். எந்த நாட்டில் இருந்து வந்தாலும் இரண்டு தடுப்பூசி கட்டாயம். புதிய வைரஸ் தமிழகத்தில் நுழையாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |