சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா நெகடிவ் சான்று சமர்ப்பிக்க தேவை இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது.