தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளிலும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பல மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமாரி மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், டிசம்பர் 1 வரை கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.