Categories
அரசியல் மாநில செய்திகள்

எதையும் தாங்கும் இதயம் எங்கள் முதல்வர் – நிலோபர் கபில்

முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள தனியார் விடுதியில் பிரதம மந்திரியின் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அமைப்பு சாராதொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு ஓய்வூதிய அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை செயலர் நஜிமுதீன், தொழிலாளர் ஆணைய செயலர் நந்தகோபால் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி 5 லட்சம் நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று அறிவித்ததின் அடிப்படையில் அமைப்பு சாரா தொழிளாலர்களுக்கு ஓய்வுதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் பழனிசாமி எந்த தேர்தலாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளதாகவும் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றாலும் அதை அதிமுக சந்திக்க தயாராக உள்ளதாகவும், மக்களிடம் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் அதற்கு பயந்து அதிமுகவை பற்றி அவர் அவதூறாக பேசி வருகிறார் என்றும் கூறினார்.

Categories

Tech |