தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் கேரளா மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் பம்பை நதி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடி பெரும்பாலும் அணைகள் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த 12 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை காசர்கோடு மாநிலம் தவிர மற்ற 13 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதன்பிறகு வருகின்ற 2ஆம் தேதி முதல் கேரளாவில் மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகங்கள் வருவாய்த்துறை மற்றும் மீட்பு துறையினர் 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.