முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான குளத்தூர் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழை காரணமாக மீண்டும் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கனமழை காரணமாக கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகர், ஜி கே எம் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.