திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 44வது பிறந்தநாள். திமுக ஆட்சியின் முதல் முறையாக எம்எல்ஏவாக வருகின்ற முதல் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் உதயநிதியின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அவரது குடும்பம் திட்டமிட்டிருந்தது. அதற்காக அமைச்சர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்களும் கட்டளைகள் பறந்தன.ஆனால் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் போது உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பேனர்கள் வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். அதை மீறி பேனர்கள் வைத்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி, அதை வைத்த கட்சி நிர்வாகிகளின் பெயர்களை தன்னிடம் வழங்குமாறு காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.