Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அடைப்பு…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் தஞ்சையிலிருந்து காலி பெட்டிகளுடன் சரக்கு ரயில் போன்றவை வந்தது. இதனால்  ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனையடுத்து முதல் நடைமேடையில் இருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அதன்பின் 3-வது நடைமேடையில் சரக்கு ரயில் வந்து நின்றது. இந்த நிலையில் பெட்டிகளை நிறுத்தி என்ஜின் மட்டும் திசை மாற்றப்பட்டு 1-வது நடைமேடைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் நிலையத்திற்குள் வந்தது. இந்நிலையில் சரக்கு ரயில் என்ஜின் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றது.

அதன்பின் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் திசை மாற்றப்பட்டு மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதனைத்தொடர்ந்து அடைக்கப்பட்ட ரயில்வே கேட் திறக்கப்பட்டதால் சாலையில் அணிவகுத்து நின்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டு சென்றது. இவ்வாறு ரயில்வே கேட் அடைக்கப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆகவே நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை போக்க மாற்று வழித்திட்டங்களான மேம்பாலம் திட்டம், இருவழிச்சாலை திட்டம் போன்ற பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |