Categories
மாநில செய்திகள்

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது அப்பாவு பேச்சு…. பாராட்டு தெரிவித்த கே.எஸ். அழகிரி….!!

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் கடந்த சில நாட்களுக்கு முன் அகில இந்திய சபாநாயகர் கலந்துகொள்ளும் 82 வது மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவும் கலந்துகொண்டு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் சார்பாக குரலை எழுப்பினார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சபாநாயகரின் மாநாட்டில் கலந்து கொண்ட அப்பாவு மாநில உரிமைகள் குறித்து தமிழகத்தின் குரலை எழுப்பி இருக்கிறார். அவரது குரல் இந்தியாவின் பல மாநிலங்களில் ஆளும் பாஜக இல்லாத அரசுகளின் குரலாக ஒழித்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் சபாநாயகரின் அதிகாரம் குறித்தும், அதில் மத்திய அரசு மற்றும் நீதிமன்றங்கள் தலையீட்டினால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் கருத்துகளை கூறியுள்ளார். ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது அந்த மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்த கூடிய செயல் என்று அவர் தெளிவாக காட்டியுள்ளார்.

மேலும் மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் மசோதாவை கிடப்பில் போடுவதோ அல்லது திருப்பி அனுப்புவதோ அந்தந்த மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. எனவே நிராகரிக்கப்பட்ட மசோதாவுக்கு காரணத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவரது தைரியமான பேச்சு இந்தியா முழுவதையும் திரும்பிப்பார்க்க செய்தது. இவருடைய பேச்சு பாராட்டுக்கும் உரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |