தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து நிலையில் மீண்டும் கனமழை தொடர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நேற்று புளியந்தோப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பட்டாவை பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கக் கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தேங்க கூடிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சென்னையில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்க கூடிய இடங்களில் மாநகராட்சி எந்தெந்த பணிகளை மேற்கொண்டு உள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.