Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |