சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து சிலை கடத்தல் விசாரணை குறித்த ஆவணங்களை சிலை கடத்தல் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபய் குமார் சிங்கிடம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்வேல் பணிக்காலத்தை நீட்டிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து எந்த உத்தரவும் வெளியிடமுடியாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் பொன் மாணிக்கவேல் இன்றுடன் பொறுப்பிலிருந்து விடுபடுகிறார்.