Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அரசு தலைமை ஏற்ற பிறகு இந்தத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. தமிழக அரசு அனைத்து கூட்டுறவு சங்கங்களில் இருக்கும் நகை கடன்களையும் ஆய்வு செய்து,உரிய ஆலோசனை மேற்கொண்டு நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது

இதனைத் தொடர்ந்து அனைத்து கூட்டுறவு வங்கி மட்டும் சங்கங்களில் கடந்த மார்ச் மாதம் வரை நிலுவையில் உள்ள நகைகள் மற்றும் ஏப்ரல் வரை வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் குறித்த ஆய்வை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டது. அதற்காக வேறு மாவட்ட அதிகாரிகள் அடங்கிய தனிக்குழு அமைத்து 100 சதவீதம் முழுமையாக ஆய்வு மேற் கொள்ளுமாறு கடந்த செப்டம்பர் மாதம் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது. அவ்வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கீழ் பெரும்பாலான மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நிபந்தனைகளின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தகுதியானவர்களின் பெயர்பட்டியல் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இன்னும் சில பகுதிகளில் ஆய்வு பணி முடிவு பெறவில்லை. இந்நிலையில் விரைந்து ஆய்வு பணிகளை முடிக்கும் வரை கூட்டுறவு துறை, மண்டல இணைப்பதிவாளர் களை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுகுறித்த அறிக்கையை வருகின்ற 30-ஆம் தேதிக்குள் கூட்டுறவு சங்க பதிவாளர் களிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |