அமெரிக்க அரசு, புதிய வகை கொரோனா தொற்று பரவுவதால் 8ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வரும் 29ஆம் தேதியிலிருந்து 8 நாடுகளுக்கான பயணத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது. போஸ்வானா என்ற தென்னாப்பிரிக்க நாட்டில் Omicron என்ற புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, ஜிம்பாப்வே, மலாவி, லெசோதா, ஈஸ்வதினி, போஸ்வானா, நமீபியா, மொசாம்பிக் மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய 8 நாடுகளுக்கு பயணத் தடை அறிவித்திருக்கிறது. அமெரிக்க அரசு, தங்கள் குடிமக்கள் மற்றும் நிரந்தர வாழ உரிமை உடையவர்கள் தவிர பிற மக்களுக்கு நாட்டிற்குள் அனுமதி இல்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறது.
இதற்கு முன்பே, பிரிட்டன் இந்த நாடுகளுடனான விமான சேவைகளை ரத்து செய்து விட்டது. ஐரோப்பிய நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.