Categories
மாநில செய்திகள்

BIG ALERT: 2 நாட்கள் ரெட் அலர்ட்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரையில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இன்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |