தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷேக் சபீக். இவர் திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்துள்ளார்.
எனவே வேலை விஷயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று தனது மனைவியிடம் கூறி விட்டு பக்கத்துக்கு வீட்டில் மறைந்திருந்துள்ளார். இதை அறியாத அவருடைய மனைவி தன்னுடைய கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
இதை கவனித்து கொண்டிருந்த அப்பெண்ணின் கணவர், எஸ்ஐ ஷேக் சபீ தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் வீட்டின் கதவை தட்டி திறக்க செய்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று எஸ்.ஐ யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த எஸ்ஐ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.