Categories
தேசிய செய்திகள்

“அந்த மனசு தான் சார் கடவுள்” அப்பா கொடுத்த வரதட்சணை பணம்…. மகள் என்ன செய்தார் தெரியுமா…??

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி கன்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி பிரவீன் கிஷோர் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக அவரது தந்தை ரூ.75 லட்சம் வரை வரதட்சணை கொடுக்க இருந்தார். இதையறிந்த மணமகள் அஞ்சலி கன்வார், தனது தந்தையிடம் வரதட்சணை பணத்தில் பெண்கள் விடுதி கட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார். பின்னர், மகளின் சேவை மனப்பான்மைக்காக, தொகை ஏதும் குறிப்பிடாமல் Blank Cheque ஒன்றை தந்தை கொடுத்துள்ளார்.

அதில் ‘உனக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதை எழுதிக் கொள்’ என்றும் மகளிடம் கூறியுள்ளார். மணமகள் அஞ்சலி கன்வாரின் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது பகுதியில் பெண்கள் விடுதி கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |