தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Categories