Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: குடும்ப வருமான உச்சவரம்பு அதிகரிப்பு…. ஊக்கத்தொகையும் உயர்வு…. தமிழக அரசு அதிரடி…!!!

முழுநேர முனைவர் பட்டத்திற்கான ஊக்க தொகை திட்டத்தில் பட்டியலின மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிகையில், 2003- 14 ஆம் கல்வியாண்டு முதல் முழுநேர முனைவர் பட்டப்படிப்பை சேர்ந்த மொத்தம் 700 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஒரு நபருக்கு 5000 வீதம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து 2017-2018 ம் கல்வியாண்டு முதல் 700லிருந்து 1200ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டுநிதிநிலை அறிக்கையில், ‘முனைவர் பட்டப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டமும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் என்ற அளவில் உயர்த்தப்படும். இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 16 கோடியாக உயர்த்தப்படும்’ என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது முழுநேர முனைவர் பட்டத்திற்கான ஊக்க தொகை திட்டத்தில் பட்டியலின மாணவர்கள் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 8 லட்சமாக உயர்த்தியும், ஒரு மாணவருக்கு 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |