சென்னை தி. நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் சென்னை தி நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். விஜயராகவா சாலை, ஜி என் சாலையில் கொட்டும் மழையில் முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Categories