பிக்பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் சீசன் 5. விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள்தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ காலில் பேசுகிறார். கமலுக்கு துணையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.