Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஊர்க்காவல் படைவீரர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஊர்க்காவல் படை வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லையில் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இவர் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் அஜித் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்தின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |