Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலே அதிக ஏழைகள்…! இங்கு தான் வசிக்குறாங்க… வெளியான லிஸ்ட் இதோ ..!!

நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில் பீகார், ஜார்கண்ட், உத்திரப்பிரதேச மாநிலங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

நிதி ஆயோக்கின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. மக்கள் நல்வாழ்வு கல்வி, வாழ்க்கை தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களை கொண்டு, நாடு முழுவதும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தியது. இதன்படி பீகாரில் 51.91 விழுக்காடு பேர் ஏழைகள் என தெரியவந்துள்ளது. ஜார்கண்டில் 42.16 விழுக்காடு பேரும், உத்தரபிரதேசத்தில் 37.79 விழுக்காடு பேர் ஏழைகள் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

36.65 விழுக்காடு ஏழைகளுடன் மத்திய பிரதேசம் 4-ஆம் இடத்திலும், 32.67 விழுக்காடு ஏழைகளுடன் மேகாலயா 5-வது இடத்திலும் உள்ளது.0.79 என்ற விழுக்காடு உடன் கேரளா, 3.76 விழுக்காடு ஏழைகளுடன் கோவா, 3.82 விழுக்காடு ஏழைகளுடன் சிக்கிம், 4.89 விழுக்காடு ஏழைகளுடன் தமிழ்நாடு, 5.59 விழுக்காடு ஏழைகளுடன் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பட்டியலில் கடைசி 5 இடங்களை பிடித்துள்ளன. வறுமையில் உள்ளவர்கள் மேம்படுத்தும் திட்டங்கள் வகுக்க இந்த ஆய்வு உதவும் என, நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |