சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து இவர் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்த வாரம் வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.