Categories
மாநில செய்திகள்

செம மழையால் அடடே…! 1இல்ல 2இல்ல 962ஏரிகள்… தண்ணீரால் நிரம்பிய தமிழ்நாடு …!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட 1,022 ஏரிகளில் 962 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன.

தொடர் கனமழை காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பாலாறு வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகள், கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 344 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 506 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், சென்னையில் 16 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளன.

காஞ்சிபுரம், ஓரிக்கை செவிலிமேடு, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிறைந்த மாவட்டங்கள் அனைத்திலும், நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Categories

Tech |