நகுல் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் ”வாஸ்கோடகாமா” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.