Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் மருத்துவர் கொலை வழக்கு: நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில், நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இரு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரும் திட்டமிட்டு பெண் மருத்துவரின் இரு சக்கர வாகனத்தில் பஞ்சர் செய்து, பின்னர் உதவி செய்வதுபோல் நடித்து அவரை பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், நால்வருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நால்வரும் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

Categories

Tech |