Categories
தேசிய செய்திகள்

எடு… எடு…. ரூ 35 தான்…. அலைமோதும் கூட்டம்…. பாதுகாப்புக்கு ஹெல்மட் ..!!

மக்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை ரூ. 35க்கு ஹெல்மெட் அணிந்த நிலையில் மாநிலத்தின் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் வெங்காய உற்பத்தி பற்றாக்குறையால் சில நாட்களாக வெங்காயத்தின் விற்பனை விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில், பீகாரின் கூட்டுறவு அங்காடி ஊழியர்கள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35க்கு விற்பனை செய்வதை அறிந்து பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால், பாதுகாப்பு கருதி ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அங்காடி ஊழியர் ஒருவர் கூறுகையில்,” எங்கள் பாதுகாப்பாக நாங்கள் ஹெல்மெட் அணிந்திருக்கிறோம். வெங்காயம் போதுமான அளவு எங்களிடம் இருக்கிறது. இருப்பினும் கிடைத்துவிடாதா என்ற பயத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எங்களுக்கு காவல்துறையும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவில்லை என்றார்.

வெங்காயம் வாங்க வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் கூறுகையில்,” நான் அதிகாலை 4 மணி முதல் இங்கு நிற்கிறேன். சந்தையில் வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ 80 முதல் ரூ 100 வரை விற்கப்படுகிறது. ஆனால், இங்கு கிலோ ரூ 35க்கு விற்கப்படுவதால் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது என்றார்.

Categories

Tech |