Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னாங்கல்பாளையம் பகுதியில் குமாரரத்தினதுரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக பனியன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குமாரரத்தினதுரைசாமி சரியாக தொழில் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குமாரரத்தினதுரைசாமி நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி சகுந்தலாமணி கதவை தட்டியுள்ளார்.

ஆனால் குமாரரத்தினதுரைசாமி கதவை திறக்காததால் அருகில் உள்ள ஜன்னல் வழியாக சகுந்தலாமணி பார்த்துள்ளார். அப்போது குமாரரத்தினதுரைசாமி சேலையால் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரரத்தினதுரைசாமியின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |