Categories
மாநில செய்திகள்

கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை…. இது 4வது முறை…. முதல்வர் டுவிட்…!!!

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்  “சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் 4வது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து, முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து, பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான்.

அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது. அடுத்த சில நாட்களுக்கும் மழை தொடரும் என்பதால் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |