Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியரக்ளுக்கு ஜாக்பாட்…. வெளியான இனிப்பான செய்தி…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் படி வீட்டு வாடகை படியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 30 சதவீதம் அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்திலிருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படியும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வீட்டு வாடகைப்படியை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால், எக்ஸ் பிரிவில் உள்ள நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு, 5,400 ரூபாய் கிடைக்கும். ஒய் பிரிவில் உள்ள நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு 3,600 ரூபாயும், இசட் பிரிவில் உள்ள நகரங்களில் வசிக்கும் ஊழியர்களுக்கு 1,800 ரூபாய் கிடைக்கும் எனத் தெரிகிறது. 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்கள், எக்ஸ் பிரிவின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |