கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்(06005) இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 23-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமுனையில் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 3.10மணிக்கு நாகர்கோவில் சந்திப்பில் இருந்து புறப்படும் ரயில் (06006), மறுநாள் காலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
அதனுடன் சென்னை தாம்பரம்- நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி நாகர்கோவில் சந்திப்பிலிருந்து டிசம்பர் 26ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இதனைப் போலவே எதிர்திசையில் டிசம்பர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் அதிவேக சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.