Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு…. 23 மாவட்டங்களுக்கு அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து,தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகக் கூடும் என்றும், அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரம் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, அம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |