நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் விழா வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் பாரதி ராஜா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உள்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விழாவில் இயக்குநர் பாரதி ராஜா பேசுகையில், ” ரஜினியுடன் எனக்கு இரண்டு முறை கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில முறை அவருடன் முரண்பாடு ஏற்பட்டது. இது குறித்து அறிக்கை வெளியிட்டேன்.
ஆனால், அப்போதுகூட அவர் என் மீது கோபப்படவில்லை. அவ்வளவு எளிமையாக பழகக்கூடியவர் ரஜினிகாந்த். அவரின் அரசியல் பயணம் குறித்து நான் பேச விரும்பவில்லை. அதைத்தொடர்ந்து கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், ” நடிகர் ரஜினி அனைவருக்கும் உதவும் உள்ளம் கொண்டவர். அவர் நிச்சயம் வென்று காட்டுவார்” என்று பேசினார்.