Categories
மாநில செய்திகள்

JUSTIN : பழனியில் ரோப் கார் சேவை நாளை ரத்து…. வெளியான அறிவிப்பு….!!!!

பழனியில் ரோப்கார் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம். பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாளை ரோப்கார் சேவை இயங்காது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார், மின்இழுவை ரெயில் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இவற்றில் பக்தர்கள் பெரிதும் விரும்புவது ரோப்கார் சேவையே.

இந்த ரோப்கார் நிலையத்தில் தினசரி ஒரு மணி நேரம் மற்றும் மாத, ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை ரோப்கார் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், பணி முடிந்த பிறகு மீண்டும் சேவைகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |