ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பூங்காவிலிருந்து எடுத்துவந்த கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டு காலத்தை சார்ந்த சுமார் 17 கிலோ எடை கொண்ட எரிகல்லை தன்னுடைய வீட்டில் வைத்து 6 ஆண்டுகளாக தங்கம் என்று நினைத்து பராமரித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக பூங்கா ஒன்றிற்கு தங்கத்தை தேடி சென்றுள்ளார். அவ்வாறு தங்கத்தைத் தேடி சென்ற அவருக்கு சுமார் 4.6 பில்லியன் வருடத்தை சார்ந்த 17 கிலோ எடையுடைய எரிகல் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த கல்லை வானிலிருந்து பூமிக்கு வந்த எரிகல் என்பதை அறியாமல் அது ஒரு தங்கம் என்று நினைத்து தன்னுடைய வீட்டில் வைத்து 6 ஆண்டுகளாக டேவிட் பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவர் 17 கிலோ எடை கொண்ட அந்த எரிகல்லை அருங்காட்சியகம் ஒன்றிற்கு எடுத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போதுதான் டேவிட்டுக்கு கடந்த 6 ஆண்டுகளாக தன்னுடைய வீட்டில் வைத்து பராமரித்த 17 கிலோ எடையுடைய அந்த கல் வானிலிருந்து பூமிக்கு வந்த எரிகல் என்ற விஷயம் தெரிய வந்துள்ளது.