திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா காளிமாதா என்பவர் அகில இந்திய யுவ மோர்ச்சா தர்ம சார்யா பட்டம் பெற்றவர். இவர் திருவண்ணாமலை மகாதீபம் தரிசனத்திற்காக திருவண்ணாமலைக்கு சென்றார். முகத்தில் சாயம் பூசி உதட்டில் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு நிறைய தங்க நகைகளை அணிந்திருந்தார். சொகுசு காரில் வந்த அவர், தனது தலை முடியிலும் சாயம் அடித்திருந்தார். திருவண்ணாமலை ரமணாஸ்சிரமம் அருகிலுள்ள காளி கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றார்.
அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு குங்கும திலகமிட்டு ஆசீர்வாதம் வழங்கினார். அதன் பிறகு உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை என்று கூறிய அவர், தமிழகத்தில் 3 மாதத்திற்குப் பிறகு பிரளயம் ஏற்படும். 3 நாட்கள் முழு கடையடைப்பு நடக்கும். பின்னர் அமைதியான சூழல் உருவாகும் என தெரிவித்தார். விரைவில் திருவண்ணாமலையில் தினமும் 500 முதல் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.