தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சேகரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட குட்டை முனியப்பன் கோவில் பகுதியில், குடியிருப்புகள் உள்ள இடத்தில் நீண்ட நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசிகிறது. மேலும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.