Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் பிக் பாஷ் லீக் டி20 :முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்….!!!

ஆஸ்திரேலியாவில் நடந்த  மகளிர் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் வெற்றி பெற்றது .

ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது .இதில் நேற்று  பெர்த் நகரில் நடந்த இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்-அடிலைட் ஸ்டிரைகர்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற அடிலைட்  அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்  அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது .

இதில் அதிகபட்சமாக டிவைன் 35 ரன்னும் ,காப் 32 ரன்னும் குவித்தனர் .இதன்பிறகு 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடிலைட் அணி விளையாடியது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Categories

Tech |