பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள காசாநாடு புதூரை சேர்ந்த பாலகுமார், பாரதிதாசன் நகரை சேர்ந்த கோகிலன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி அவர்கள் வைத்திருந்த நகைகள் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொள்ளையடித்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் பாலகுமார், கோகிலன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எங்கு கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.