Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு- ஹன்சிகாவின் ‘மஹா’…. முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மஹா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். தற்போது சிம்பு  வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜமீல் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மஹா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது.

Categories

Tech |