சுவிட்சர்லாந்தில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழப்போரில், பலியான போராளிகளை நினைவுகூருவதையும், மதிப்பதையும், அடிப்படைக் கடமையாக, விடுதலைப் புலிகள் கருதுகிறார்கள். அதன்படி, கடந்த 1989-ஆம் வருடத்தில் நவம்பர் 27-ஆம் தேதி அன்று மாவீரர் தினமாக, விடுதலைப் புலிகள் அறிவித்தனர். எனவே, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ஆம் தேதி மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூட்சேர்ன் என்ற பகுதியில் துர்க்கை அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில், தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைஇடம்பெற்றிருக்கிறது.