Categories
தேசிய செய்திகள்

உத்திரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து…. இதுதான் காரணம்…. எஸ்.டி.எஃப். அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று 2 கட்டமாக நடைபெற இருந்தது. அதில் முதல்கட்ட தேர்வு 2,554 மையங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் 2 வது கட்டத் தேர்வு 1754 மையங்களில் பிற்பகல் 2.30 முதல் மாலை 5 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு முன் வாட்ஸ்-அப்பில் வினாத்தாள் வெளியாகியது. இதனால் இன்று நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே வினாத்தாள் வெளியானதையடுத்து மாநிலம் முழுவதும் எஸ்.டி.எஃப். அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் லக்னோவில் 4 பேர், ஷாம்லில் 3 பேர், அயோத்தியில் 2, கௌசாம்பியில் ஒருவர் மற்றும் பிரயாக்ரஜில் 13 பேர் என 23 பேரை எஸ்.டி.எஃப். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.எனவே மாநிலம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் இந்த தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. பிரசாந்த்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மறுதேர்வு எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |