Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு?…. உறுதியாக சொன்ன அமைச்சர்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு மழைப்பொழிவை வழங்கி வருகிறது. வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வழக்கத்தை விட 74 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதால் அரசு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே மழை காரணமாக மாணவர்களின் நலனைக் கருதி பள்ளிகளுக்கு  அடுத்தடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கெரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டன. இந்நிலையில் பருவமழையால் பள்ளிகளுக்கு  தொடர் விடுமுறை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிலளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கூடுதல் வகுப்புகள் வைத்தே பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். இதன் மூலம் ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களின் படி ஆசிரியர்கள் பாடம் நடத்தலாம். அதற்கேற்ப பள்ளி மாணவர்களை தயார் படுத்தலாம்.

இந்த சூழலில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு பெருமை சேர்க்கும் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் அரசு பள்ளி சமையல் கூடத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை. பணியாளர்களின் மிக நேர்த்தியான செயல்பாடு மற்றும் மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை ஆகியவற்றைக் கொண்ட இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |