Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “நேர்த்தியுடன் செய்வீர்கள்”.. எதிர்ப்புகள் விலகி செல்லும்.!!

துலாம் ராசி அன்பர்களே..!! சிறு செயலையும் இன்று நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். இன்று பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும்  கிடைக்கும். இன்று வீண் பேச்சைக் குறைப்பது மட்டும் நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலுமே லாபம் கிடைக்கும். இன்று பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று முக்கியமான பணியை  நீங்கள்  நிறைவேற்றும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |