இந்திய தலைநகரமான டெல்லியில் தொடர்ந்து பல நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பயிர்களை விவசாயிகள் எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. எனவே காற்று மாசுபாட்டை குறைக்க கூடிய வகையில் பொது போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும் சைக்கிளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லி அரசு கேட்டுக் கொண்டது.
அதுமட்டுமில்லாமல் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காற்றின் தரம் 372 ஆக உள்ளது என்று வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே குருகிராம் பகுதியில் 349 மற்றும் நொய்டா பகுதியில் 497 என்ற அளவில் காற்றின் தரம் உள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.