நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 345 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்கள் குவித்தது. இதையடுத்து 49 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இதில் நேற்று நடந்த 3-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் குவித்தது .இதனிடையே 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
இதில் புஜாரா 23 ரன்னிலும் ஆட்டமிழக்க ,மயங்க் அகர்வால் 17 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக வந்த ரகானே 4 ரன்னில் வெளியேற ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களமிறங்கி அஷ்வின் 32 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 62 ரன்னும் விருத்திமான் சஹா 61 ரன்னும் எடுக்க இறுதியாக இந்திய அணி 283 ரன்கள் எடுத்திருந்த போது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது .இதனால் நியூசிலாந்து அணிக்கு284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது .